உன் பாதங்கள் பட கேட்கும்

என் வீட்டு வாசற்படி ...

 

உன் புன்னகையால் ஒளி பூசுவாய்

என காத்திருக்கும்

என் அறையின் சுவர்கள் ...

 

உன் வருகைக்காகவே

தினமும் மூட அடம்பிடிக்கும்

வாசற்கதவு ...

 

நீ சாய்ந்து நிற்பதற்கெனவே

கட்டப்பட்ட முற்றத்து தூண்கள் ...

 

நீ மட்டுமே ஆடவேண்டுமென

யாரையும் அனுமதிக்காத

ஊஞ்சல்

 

 

 

 இப்படி எல்லாவற்றிற்குமே

உன்னை கொண்டே

அலங்காரம் பண்ணிகொள்ள

ஆசை படும்  இவற்றிற்கெல்லாம்

எப்படி சொல்லி புரிய வைப்பேன்

நீ "அழுத்தகாரி' ....." என்பதை

 

 

 

 

 

அதனால்தான்

இவர்களிடம்

எதுவும் பேசாமலேயே

கத்திருக்கிறேன்-நான்

"அழுத்தகாரனாய் ....."

 

 

 

 

  

 

Go to Poem Index              Previous           Next         Go to Home