உனக்காக

உருவாகிகொண்டேயிருக்கும்

உனக்கான என் காதலை

நீ பெற்றுக்கொள்ள தயíகுவதால்...

 

என் இதயத்தில்

காதல் வேகவேகமாக

வளர்ந்துகொண்டே போகிறது

பலூனில் நிறையும் காற்றுபோல்...   

 

என்றாவது ஒரு நாள்

காதல் அழுத்தால்

வெடித்து சிதறத்தான் போகிறது...!

 

நான் இறப்பது பற்றி

துளிக்கூட துயரமில்லை...

ஆனால்,

உனக்காகவே

என் உயிர் ஊற்றி ...

உன் நினைவு போர்த்தி ...

வளர்த்த என் காதல்

உனக்கான என் காதல்

கேட்பாறின்றி பார்பாறின்றி

அழுதுகொண்டிருக்குமே

அநாதையாய் ..... !!

 

 

 

குறிப்பு:-

தயவுசெய்து

நான் போன பிறகாவது

அந்த அநாதையை ஆதரித்துகொள்...

உன் அரவணைப்பில்

மட்டும்தான் அழாமல் இருக்கும்

உனக்கு சொந்தமான

உனக்கான என் காதல்..... 

 

 

 

 

 

 

Go to Poem Index      Previous       Next                       Go to Home